டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரி 30 சதவீதத்தில் இருந்து 19.40 சதவீதமாக குறைப்பு...

டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரி 30 சதவீதத்தில் இருந்து 19.40 சதவீதமாக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரி 30 சதவீதத்தில் இருந்து 19.40 சதவீதமாக குறைப்பு...

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து பெட்ரோல் மீதான கலால் வரியில் ஐந்து ரூபாயும், டீசல் விலையில் 10 ரூபாயையும் மத்திய அரசு குறைத்து அறிவித்தது. இதனை முன்மாதிரியாக கொண்டு கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன.

அதன்வரிசையில் தற்போது டெல்லி அரசும் பெட்ரோல் மீதான வாட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 19. 40 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.