உத்தரகாண்ட் பனிச்சரிவு..! உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்..!

உத்தரகாண்ட் பனிச்சரிவு..! உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்..!

உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மலையேற்றம்:

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் நிறுவனம் என்ற அரசு மலையேறுதல் கல்வி பயிற்சி நிறுவனம் உள்ளது. இதனைச் சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள் மற்றும் 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர், உத்தர்காசியில் உள்ள இமயமலையின் இரண்டாவது திரவுபதி கா கண்டா சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக்கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 

பனிச்சரிவு:

அப்போது, மலைச் சிகரத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் இந்திய விமானப் படையினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்டும் பணியில் களமிறங்கினர். 

மேலும் படிக்க: பேச்சுவார்த்தை ஒன்றே சரியான தீர்வு.. உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்..!

அதிகரிக்கும் உயிரிழப்பு:

பனிச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இரங்கல்:

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.