ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பிய உத்திரப்பிரதேச போலீஸார்... ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் ஆஜராக உத்தரவு...

ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பிய உத்திரப்பிரதேச போலீஸார்... ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் ஆஜராக உத்தரவு...
சர்ச்சைக்குரிய வீடியோ பதிவேற்றியது தொடர்பாக டுவிட்டர் நிறுவன உயரதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்திரபிரதேச போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
 
இந்தியாவில் டுவிட்டர் நிறுவனம் சட்ட பாதுகாப்பை இழந்துள்ளது. இந்த நிலையில் வகுப்பு வாதத்தை தூண்டும் வகையிலும், அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய முதியவர் ஒருவரை சிலர் மதத்தின் பெயரால் தாக்குவது போன்ற வீடியோ டுவிட்டரின் பதிவேற்றப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
 
வகுப்புவாத கோணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என்று காவல்துறை விளக்கமளித்தும், இந்த வீடியோவை டுவிட்டர் நிறுவனம் நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து வீடியோவை பதிவேற்றியது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்த உத்திரபிரதேச போலீசார், இது தொடர்பான விசாரணைக்கு டுவிட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மணீஷ் மகேஷ்வரி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
 
வழக்கு விசாரணைக்காக வீடியோ கால் மூலம் ஆஜராக டுவிட்டர் தரப்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.