பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் - சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்!

பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் - சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்!

நாட்டையும், ஜனநாயகத்தையும் காக்க, எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என, சீதாராம் யெச்சூரி அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜவுக்கு எதிரான மூன்றாவது அணி:

பாஜகவுக்கு எதிரான மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில், அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கென கடந்த மாதம் பீகார் சென்ற தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து வலுவான எதிரணியை உருவாக்கும் முயற்சி தீவிரமடைந்தது. நேற்று ராகுல் காந்தியை சந்தித்து, எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்புக்கு அழைப்பு விடுத்த நிதிஷ்குமார், இன்று டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசினார்.   

இதையும் படிக்க: அடுத்த தீர்ப்பு யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஈபிஎஸ், ஓபிஎஸ்..!

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் யெச்சூரி:

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யெச்சூரி, எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பேசிய நிதிஷ்குமார், பல்வேறு மாநிலங்களில் உள்ள இடதுசாரி கட்சிகள், மண்டல கட்சிகள் மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒன்றிணைய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் தனக்கு பிரதமர் ஆகும் எண்ணமோ, அதற்கு தகுதி இருப்பதாகவோ தாம் கருதவில்லை எனவும் நிதிஷ்குமார் விளக்கம் அளித்தார்.