ஃபளாஷ் சேலில் கொள்ளையடிக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்... மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாய்ச்சல்...

அமேசான், வால்மார்ட் போன்ற அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய சட்டங்களை மீறி கொள்ளையடிக்கும் நடைமுறைகளில் ஈடுபடுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாக சாடியுள்ளார். 

ஃபளாஷ் சேலில் கொள்ளையடிக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்... மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாய்ச்சல்...
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இ.காமர்ஸ் எனப்படும் மின்னணு  வர்த்தகம் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. அமேசான், வால்மார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஃபளாஷ் சேல் மூலம் குறிப்பிட்ட பொருட்களை குறிப்பட்ட நேரத்துக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன. இதனால் உள் நாட்டு சில்லறை வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
 
இதனை கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமேசான், வால்மார்ட் போன்ற அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனங்கள் மிகவும் திமிர்பிடித்தவை என குறிப்பிட்டதுடன், இந்திய சட்டங்கள் பலவற்றை மீறுவதாகவும், கொள்ளையடிக்கும் விலை நடைமுறைகளில் ஈடுபடுவதாகவும் சாடினார். சமீபத்தில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஃபளாஷ் சேல் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.