மோடி அமைச்சரவையில் இருந்து அடுத்தடுத்து இரண்டு அமைச்சர்கள் பதவி விலகல்:

வரும் வியாழக்கிழமை ஜூலை 7, பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில் இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

மோடி அமைச்சரவையில் இருந்து அடுத்தடுத்து இரண்டு அமைச்சர்கள் பதவி விலகல்:

கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.அதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்.சி.பி சிங் ஆகிய இருவரின் மக்கள் சேவையை பாராட்டி பேசினார். நாட்டிற்கும் மக்களுக்கும் இருவரும் கடுமையாக உழைத்ததாகவும் அவர்களின் சேவை இந்தியாவை பெருமை அடைய செய்துள்ளதாகவும் பாராட்டினார். இரு அமைச்சர்களையும் பிரதர் நரேந்திர மோடி மோடியின் பாராட்டியதனால், அது அவர்களின் கடைசி அமைச்சரவைக் கூட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை உண்மையாக்கும் வகையிலேயே தற்போது முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்.சி.பி. சிங் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  முன்னதாக, இன்று காலை நக்வி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகிய இருவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  
குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் திரௌபதி முர்மு முன்னிறுத்தப்பட்டு ஆதரவு கோர பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளார். இந்த சூழலில், பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருப்பதால், இஸ்லாமியர் ஒருவரை குடியரசு துணை தலைவர்காக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த பின்னணியில், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் இந்திய துணை குடியரசு தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் முன்னிருத்தப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

துணை குடியரசு தலைவர்காக இருக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. துணை குடியரசு தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 19 கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6-ம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.