காளி குறித்த மஹுவா மொய்த்ராவின் கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் விளக்கம்..!

“என்னைப் பொறுத்தவரை காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக்கொள்ளும் கடவுள்தான் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்து இருந்தது சர்ச்சை ஆனா நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அவரின் கருத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காளி குறித்த மஹுவா மொய்த்ராவின் கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் விளக்கம்..!

‘பறை’, ‘தேவதைகள்’, ‘பலிபீடம்’ உட்பட சில ஆவணப்படங்களை இயக்கியுள்ள கவிஞர் லீனா மணிமேகலை தற்போது ‘காளி' என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் காளி தேவி வேடம் அணிந்த பெண், புகைப்பிடித்துக் கொண்டு, கையில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் கொடியை பிடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் குறி பாஜகவினர், சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

வினீத் ஜிண்டால் என்ற வழக்கறிஞர், இயக்குனர் லீலா மணிமேகலை மீதுடெல்லி போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், கவிஞர் லீனா மணிமேகலையை கைது செய்யவேண்டும் என்று ட்விட்டரிலும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், இது குறித்து தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “என்னை பொறுத்தவரை காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான்” எனக் கூறி ஆதரவு தெரிவித்து உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் இது போன்ற கருத்துகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும், எம்.பி. மஹுவா மொய்த்ராவின் "காளி தேவி குறித்து வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அவை எந்த வகையிலும் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை" என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் நடிகையுமான நுஷ்ரத் ஜஹான், “மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை” என்று 'காளி' போஸ்டர் சர்ச்சை குறித்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.