இந்தியா - பாகிஸ்தான் போர்...நினைவிடத்தில் மத்திய அமைச்சர்...!

இந்தியா - பாகிஸ்தான் போர்...நினைவிடத்தில் மத்திய அமைச்சர்...!

1971ம் ஆண்டு போரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய தினத்தையொட்டி டெல்லி போர் நினைவுச்சின்னத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை செலுத்தினார்.

தனிநாடு கோரிக்கை:

பாகிஸ்தானில் கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்ற வேறுபாடு இருந்தது. அதுமட்டுமல்லாமல், வங்காளமொழி பேசும் மக்கள் மோசமாக நடத்தப்பட்டதால் கிழக்கு பாகிஸ்தானில் இருந்த மக்கள் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனி நாடாவதற்கு போராடிக்கொண்டிருந்தனர். அதன்படி மார்ச் 26, 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிய வேண்டும் என அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்தனர். 

இதையும் படிக்க: 1971 இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி தினம்.. ! ஒவ்வொரு இந்தியரும் பெருமைகொள்ளும் நாள் இன்று..!

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா:

இதையடுத்து பாகிஸ்தானிடமிருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க,  பாகிஸ்தானுடன் போரிட்ட இந்தியா, 1971 டிசம்பர் 16 ஆம் தேதி பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் என்ற ஒரு தனி நாடு உருவாக காரணமாக அமைந்தது. இதனால் அந்நாளை இந்தியாவின் சிறப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு, பல்வேறு அரசு இடங்களில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

மரியாதை செலுத்தும் அரசு அதிகாரிகள்:

இந்நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதியான இன்று முப்படைத் தளபதி அனில் சவுகான், ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே மற்றும் விமானப்படைத் தளபதி சவுதாரி உள்ளிட்டோர் இந்தியா - பாகிஸ்தான் போர் நினைவுச்சின்னத்தில் இந்நாளை நினைவு கூர்ந்தனர். அதேபோன்று, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் இந்தியா - பாகிஸ்தான் போர் நினைவுசின்னத்தில் மரியாதை செலுத்தினார்.