இந்தியா - எகிப்து இடையிலான வர்த்தக வருவாய் போதாது...இன்னும் அதிகரிக்க வேண்டும்!

இந்தியா - எகிப்து இடையிலான வர்த்தக வருவாய் போதாது...இன்னும் அதிகரிக்க வேண்டும்!

எகிப்து சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு வர்த்தக உறவுகள் குறித்தும், பருவநிலை மாற்றம் குறித்தும் ஆலோசித்தார்.

எகிப்தில் அடுத்த மாதம் ஐநா சபையின் பருவநிலை உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கெய்ரோ சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் அல் சிசியை சந்தித்து இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தார்.

இதையும் படிக்க: தமிழ் உணர்வை அழிக்க பயன்படுத்தும் சொல் தான் திராவிடம்...ஹெச்.ராஜா பேட்டி!

மேலும் பருவநிலை மாற்றத்தால் உலக அளவில் ஏற்பட்டு வரும் பேரழிவு குறித்து விவாதித்த ஜெய்சங்கர், இந்தியாவில் இதுவரை கண்டிராத பேரழிவு, கடுங்குளிர், அனல் காற்று வீசி வருவதாகவும் கவலை தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்தியா- எகிப்து இடையிலான  7.2 பில்லியன் டாலர் வர்த்தக வருவாய் போதாது என்பதால், அதனை அதிகரிக்கப்பதற்கான வழிகளை ஆலோசிக்கும்படி எகிப்து அதிபர் கேட்டுக்கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.