"நாளை நீங்கள் ஆட்சியில் இல்லாதபோது......" பாஜகவை கிண்டலடித்த மம்தா!!!

"நாளை நீங்கள் ஆட்சியில் இல்லாதபோது......" பாஜகவை கிண்டலடித்த மம்தா!!!

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த வியாழக்கிழமை  ஆளுநர் மாளிகைக்கு சென்று மாநிலத்தின் தற்காலிக ஆளுநர் இல.கணேசனை சந்தித்தார்.

அப்போது துர்கா பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ஆளுநருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது ஆளுநரின் உடல்நலம் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த சந்திப்பு குறித்து தகவல் அளித்த முதல்வர், தற்போது ஆளுநர் நலமாக இருப்பதாக தெரிவித்தார். 

ஆளுநர் உடல்நிலை:

கவர்னருக்கு விஜயதசமி வாழ்த்துக்கள் கொடுக்க சென்றிருந்தேன் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார். சமீபத்தில் சென்னைக்கு தனிப்பட்ட பயணமாக சென்றிருந்த கவர்னர் எல்.கணேசனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மூச்சுத் திணறல் மற்றும் பிற பிரச்சனைகள் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஆளுநர் கொல்கத்தா திரும்பியுள்ளார்.

மம்தாவின் விமர்சனம்:

”துர்கா பூஜையின் போது மகாத்மா காந்தி போன்ற சிலை காட்சிப்படுத்தப்பட்டது என்றார். அதில் பாபு தவறாக சித்தரிக்கப்பட்டார். இப்படி செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? இதுபோன்ற வெட்கக்கேடான செயலுக்கு மக்கள் பதில் சொல்வார்கள். நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், ஆனால் பூஜையின் போது எதிர்ப்புகள் வந்திருக்கலாம் என்பதால் எதுவும் பேசவில்லை. ” என்று கூறியுள்ளார் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

பாஜகவை கிண்டலடித்த மம்தா:

மேலும் மம்தா பானர்ஜி பேசுகையில்  பாஜகவை விமர்சித்தார். அப்போது “இன்று நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்.  மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறீர்கள். நாளை நீங்கள் ஆட்சியில் இல்லாதபோது, ​​இந்த  மத்திய அமைப்புகள் உங்கள் குடியிருப்புக்குள் நுழைந்து, உங்கள் காதுகளைப் பிடித்து இழுத்துச் செல்லும். அந்த நாள் விரைவில் வரும்.” என்று கிண்டலாக கூறியுள்ளார்.

                                                                                                            -நப்பசலையார்

இதையும் படிக்க:   பிரதமரின் தாயாரை அவதூறாக பேசிய ஆம் ஆத்மி தலைவர்....!! கண்டனம் தெரிவித்த பாஜக!!!