மகாத்மா காந்தியின் பிறந்த நாள்  இன்று கொண்டாட்டம்... டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை...

தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாள்  இன்று கொண்டாட்டம்... டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை...

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி ராஜ்காடில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தியையொட்டி, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மகாத்மா காந்தியின் உன்னதக் கோட்பாடுகள் உலகளவில் பொருந்துவதாகவும், லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமையை அளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.