அப்பாஆஆ....! இவ்வளவு சொத்துக்களா.. திருமலை திருப்பதி கோவிலுக்கு ...?

அப்பாஆஆ....! இவ்வளவு சொத்துக்களா.. திருமலை திருப்பதி கோவிலுக்கு ...?

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பணத்தில் ஒரு பகுதி மத்திய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் பரவியது. இதை மறுத்துள்ள தேவஸ்தானம், வங்கியில் பண கையிருப்பு மற்றும் தங்க இருப்பு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில், கடந்த 2019 ஆண்டு ஜூன் மாதம் தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் 13 ஆயிரத்து 25 கோடியே ஒன்பது லட்ச ரூபாய் நிரந்தர வாய்ப்பு நிதியாகவும், தங்க முதலீட்டு திட்டத்தில் 7339 கிலோ 740 கிராம் தங்கம் இருப்பு இருந்தது என்று குறிப்பிட்டிருந்தது. தற்போது வங்கிகளில் 15 ஆயிரத்து 938 கோடியே எட்டு லட்ச ரூபாய் பணமும், 10 ஆயிரத்து 288 கிலோ 370 கிராம் தங்கமும் இருப்பு உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்த...அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!