சாதி விவரங்களை பூர்த்தி செய்ய கால அவகாசம்… எங்கு தெரியுமா?

நீட் தேர்வு எழுதியவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சாதி உள்ளிட்ட சில தகவல்களை பூர்த்தி செய்ய கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை வழங்கியது.

சாதி விவரங்களை பூர்த்தி செய்ய கால அவகாசம்…  எங்கு தெரியுமா?

நீட் தேர்வு எழுதியவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சாதி உள்ளிட்ட சில தகவல்களை பூர்த்தி செய்ய கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை வழங்கியது.

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மாதம் 12-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், நீட் தேர்வு எழுதியோர் தங்கள் விண்ணப்ப படிவத்தில் பாலினம், குடியுரிமை, மின்னஞ்சல் முகவரி, பிரிவு, உட்பிரிவு, கல்வித்தகுதி போன்றவற்றை பூர்த்தி செய்யவும், திருத்தம் செய்யவும் இரண்டாம் முறையாக கால அவகாசம் வழங்கி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட விவரங்களை சரியாக பூர்த்தி செய்யாதவர்களும், அதில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோரும் வரும் 10-ம் தேதிக்குள்ளாக https://neet.nta.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களில் உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை நடப்பு கல்வியாண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தேசிய தேர்வு முகமையின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.