காணாமல் போன கழுதைகளை கண்டு பிடித்து தரக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்! 

ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன கழுதைகளை கண்டு பிடித்து தரக்கோரி காவல் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காணாமல் போன கழுதைகளை கண்டு பிடித்து தரக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்! 

ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன கழுதைகளை கண்டு பிடித்து தரக்கோரி காவல் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹனுமன்நகர் என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தொடர்ச்சியாக கழுதைகள் காணாமல் போவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் அதை பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை. 

ஒரு கிராமமே ஒன்று சேர்ந்து சுமார் 70க்கும் மேற்பட்ட கழுதைகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். அதாவது ஒரு கழுதைக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் என்றால் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கழுதைகளை காணவில்லை என்று புகார் வந்ததை ஒட்டி போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

போலிஸார் 15 கழுதைகளை மீட்டுக் கொண்டுவந்து வரிசையாக நிற்கவைத்து ஒவ்வொரு கழுதையின் பெயரை சொல்லி அழைத்துள்ளனர் ஆனால் ஒரு கழுதை கூட அதன் செல்ல பெயரை கேட்டு அசையவில்லை என்ற காரணத்தால், கழுதையின் உரிமையாளர்கள் தங்களுடைய கழுதைகள் மட்டும்தான் வேண்டும் என்று கூறி அடம்பிடித்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் ஒரு கிராமமே போலீஸ் நிலையம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் மனவேதனையடைந்த 
ராஜஸ்தான் போலீஸ் ஒரு சிறப்பு தனிப்படை அமைத்து கழுதைகளை தேடி வருகின்றனர். வட மாநிலங்களில் பொதுமக்கள் பொதுவாகவே கழுதைகளை பொதி சுமப்பதற்காக அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.