அன்றே கணித்த ராகுல்: வேளாண் சட்டங்கள் குறித்து ராகுல் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்...

அநீதிக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கிடைத்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். 

அன்றே கணித்த ராகுல்:  வேளாண் சட்டங்கள் குறித்து ராகுல் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்...

3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, விவசாயிகளின் தொடர் சத்தியாக்கிரகத்தால், ஆணவத்தின் தலை குனிந்ததாக பதிவிட்டுள்ளார். மேலும் அநீதிக்கு எதிரான போராட்டத்தின் விவசாயிகள் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிச்சயமாக திரும்பப் பெறும் என ராகுல் காந்தி கடந்த ஜனவரி மாதம் கூறி இருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.