குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் - திருமாவளவன்!

குடியரசு தலைவர் தேர்தலில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் - திருமாவளவன்!

குடியரசு தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் இதுவரை கிறிஸ்தவ சமுகத்தை சேர்ந்த ஒருவர் குடியரசுத்தலைவர் ஆனதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 3வது பெரிய பங்காக இருக்கும் அச்சமுகத்தினருக்கு சட்டமன்றத்திலும், நாடாளுமன்ற அவைகளிலும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை என குறை கூறிய அவர், மோடி அமைச்சரவையில் அண்மையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராகக் கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும் என்றும், இது பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் எனவும் கூறியுள்ளார்.