சோனியா காந்தி போட்ட அந்த உத்தரவு... பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத்சிங்!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உத்தரவை அடுத்து, பஞ்சாப் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை  நவ்ஜோத்சிங் ராஜினாமா செய்துள்ளார்.

சோனியா காந்தி போட்ட அந்த உத்தரவு... பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத்சிங்!!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வி குறித்து, டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியது. இதில், காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார்.  

இதனையடுத்து, உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களைத் தொடர்ந்து,, பஞ்சாப் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத்சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகலுக்கான தனது கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நவ்ஜோத் சிங் சித்து அனுப்பியுள்ளார்.