மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீதான அதிருப்தியை  தெரிவித்த தலைவர்கள்..! 

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீதான அதிருப்தியை  தெரிவித்த தலைவர்கள்..! 

மல்லிகார்ஜூன கார்கே:  "மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் அறிக்கை தேவை"

மணிப்பூரின் 80 நாட்கள் நிலைமை தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில்:- 

"பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் இது தொடர்பாக அறிக்கை அளிக்கவில்லை என்றும், இது குறித்து உண்மையாகவே கோபம் இருக்கிறது என்றால்  காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுடன் பொய்யான சமத்துவம் செய்வதற்குப் பதிலாக, உங்கள் மணிப்பூர் முதல்வரை முதலில் பதவி நீக்கம் செய்திருக்கலாம்"  என்று தெரிவித்திருந்தார். 

Your silence on Manipur violence rubbing salt on people's wounds: Kharge's  jibe at PM Modi - India Today

" இன்று பாராளுமன்றத்தில் நீங்கள் ஒரு சம்பவம் பற்றி மட்டும் அல்லாமல், மாநிலத்திலும் மத்தியிலும் உங்கள் அரசாங்கம் நடத்திய 80 நாள் வன்முறைகள் குறித்து, முற்றிலும் ஆதரவற்றவர்களாகவும், வருந்தாதவர்களாகவும் இருக்கும் நீங்கள்   விரிவான அறிக்கையை வெளியிடுவீர்கள் என்று இந்தியா  கூட்டணி எதிர்பார்க்கிறது"  என்றும்  "80 நாட்களாக வேதனையில் ஆழ்ந்துள்ள மணிப்பூர் மக்களின் கவலை தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும்", என குறிப்பிட்டுள்ளார். 

குகி பழங்குடியினப் பெண்கள் இருவர் நிர்வாணமாக அடித்து அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பூதாகரமான நிலையில், அனைவரையும் கைது செய்வோம் என பிரதமர் நேற்று பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா காந்தி: "பிரதமரை பேசவைக்க, கொடூர வீடியோ தேவைப்படுகிறது"

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேச, ஒரு கொடூரமான வீடியோ வெளிவர வேண்டியிருக்கிறது",  என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். 

PM Modi urges Himachal voters to 'create new record', Priyanka Gandhi says  'vote wisely' - India Today

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற பொதுக்கூடடத்தில் பங்கேற்ற பிரியங்கா, 77 நாட்களாக எந்த அறிக்கையும் அளிக்காத பிரதமர், ஒரு வீடியோ வைரலானதும் பேட்டியளிப்பதாக குறிப்பிட்டார். 

அப்போதும் பிரச்னையில் அரசியல் செய்யும் வகையிலேயே பிரதமர் பேசியதாகவும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விமர்சிப்பதற்கு பதிலாக, தீவிரத்தை உணர்ந்து அவர் செயல்பட வேண்டும்",  எனவும் பிரியங்கா தெரிவித்தார்.

இதையும் படிக்க   |