கலவரத்திற்கு விளக்கம் கேட்டு மம்தாவுக்கு கடிதம் எழுதிய ஆளுநர்

மேற்குவங்க கலவரத்திற்கு ஆளுநர் டிவிட்டரில் விளக்கம் கேட்டு மம்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கலவரத்திற்கு விளக்கம் கேட்டு மம்தாவுக்கு கடிதம் எழுதிய ஆளுநர்

 அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது.

தேர்தலுக்கு பின் அங்கு, பாஜகவினரை தாக்கி திரிணாமுல் காங்கிரசார்  கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது

. இந்தநிலையில் இந்த சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு அம்மாநில ஆளூநர் ஜக்தீப் தங்கார், டிவிட்டர் வாயிலாக மம்தா பேனர்ஜிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் தேர்தலுக்கு பிந்தைய கலவரத்தை மம்தா அரசு மிக மோசமாக கையாண்டதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், முதல்வருக்கு என கடிதம் எழுதிவிட்டு, அதை பொது வலைதளமான டிவிட்டரில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, மாநில உள்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஆளுநரின் இந்த செயல்பாடு தகவல் தொடர்புக்கான புனிதத்தையே சீர்குலைப்பதாகவும் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது, கலவரம் நடந்தபோது, தேர்தல் நடத்தை  விதிகள் அமலில் இருந்ததாகவும், மம்தா பொறுப்பேற்ற பின் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் டுவிட்டர் வாயிலாக பதில் தெரிவிக்கப்பட்டது.