”நாட்டின் எதிர்காலம் ஆபத்தில்....” செய்தியாளர்கள் சந்திப்பில் சசி தரூர்!!!

”நாட்டின் எதிர்காலம் ஆபத்தில்....” செய்தியாளர்கள் சந்திப்பில் சசி தரூர்!!!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், தனது போட்டியாளரான மல்லிகார்ஜுன் கார்கேவை நேரு-காந்தி குடும்பத்தினர் ஆதரித்ததாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். 

செய்தியாளர் சந்திப்பு:

காங்கிரஸ் தேர்தல் கல்லூரி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக பீகார் வந்திருந்த சசி தரூர், பீகாரின் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர் “நேரு-காந்தி குடும்பத்தை ஒதுக்கி வைப்பது காங்கிரஸ் கட்சியின் எந்த தலைவரினதும் விவேகமற்ற செயல்.  அதை நானே செய்ய விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.  

மேலும் “நான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரை தனித்தனியாக சந்தித்தேன். கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நியாயமாக நடக்கும் என்று அவர்கள் அனைவரும் வலியுறுத்தினர், அவர்கள் யாரும் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் ராகுல்..:

”நேரு-காந்தி குடும்பத்தினர் கட்சியின் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.  ராகுல் காந்தி 2017 ஆம் ஆண்டு கட்சியின் தலைவராக இருந்தார். அவர் எப்போது வேண்டுமானாலும் ராஜினாமாவை திரும்பப் பெறலாம்” என்றும் தரூர் கூறியுள்ளார்.

நாட்டின் எதிர்காலம்:

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்க்கட்சி முகாமை வழிநடத்துவதற்கு மாற்றாக பார்க்கப்படுகிறாரா என்ற கேள்வியை தரூர் தவிர்த்துவிட்டார். மேலும் பேசிய தரூர் “இருப்பினும், நாட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது என்பதில் நான் உறுதியாக உள்ளேன், 2024ல் பாஜகவுக்கு எதிராக நாம் நன்றாகப் போராட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆதரவு இல்லையா.?:

ஒரு காலத்தில் ஜி-23 பிரிவில் அவருடன் நின்ற தலைவர்களின் ஆதரவைக் கூட சசி தரூரால் பெற முடியவில்லை. மாநிலங்களின் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதாக தரூர் பேசுகிறார்.  ஆனால் மல்லிகார்ஜுன் கார்கே கட்சித் தலைவர்களிடமிருந்து தேர்தலில் வெளிப்படையான ஆதரவைப் பெறுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

                                                                                                                             -நப்பசலையார்

இதையும் படிக்க:   மீண்டும் ஒரு நேதாஜியா சசி தரூர்!!!கட்சியால் ஓரங்கட்டப்படும் காரணமென்ன!!!