50 ரூபாய் திருடியதாக தனது 10 வயது மகனை தந்தையே அடித்து கொன்ற கொடூரம்...

50 ரூபாயை திருடியதற்காக தனது 10 வயது மகனை தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

50 ரூபாய் திருடியதாக தனது 10 வயது மகனை தந்தையே அடித்து கொன்ற கொடூரம்...

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை தானே கல்வாவின் வகோபா நகர் பகுதியில் வசித்து வருபவர் 41வயதான சந்தீப் பிரஜாபதி, கடந்த புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் அவரது 10வயது மகன் கரனி அலறல் சத்தம் கேட்டுள்ளது. மேலும் தன்னை அடிக்க வேண்டாம் என அந்த சிறுவனின் அவனது தந்தையிடன் கெஞ்சிய சத்தம் அக்கம் பக்கம் வீட்டில் கேட்டுள்ளது. இதனையடுத்து மறுநாள் காலை, சிறுவனின் அத்தை வந்து பார்த்தும் பலமுறை கதவைத் தட்டியும் திறக்கவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் அக்கம்பக்கத்தினரை தொடர்பு கொண்டு போலீசார் வரவழைக்கப்பட்டனர். சிறுவனின் உடலை போர்வையால் போர்த்தியும் அவனது தங்கை அருகில் இருப்பதை  பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சிறுவனின் தந்தை பிரஜாபதியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார். அப்போழுது சிறுவன் கரன் 50ரூபாய் பணத்தை திருடியதாக அடித்து கொன்றது தெரியவந்தது. மேலும் சிறுவனின் உடல் முழுவதும் பல எலும்பு முறிந்தும் அவனது மண்டை உடைந்து பலத்த காயத்துடன் உடலை கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 50 ரூபாய் திருடிய தனது 10வயது மகனை அவரது தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.