ஆண்களுக்கு நிகரான அனைத்து வாய்ப்புகளும் பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகவே திருமண வயது உயர்த்தப்பட்டது: பிரதமர் மோடி

ஆண்களுக்கு நிகரான அனைத்து வாய்ப்புகளும் பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகவே, அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கு நிகரான அனைத்து வாய்ப்புகளும் பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகவே திருமண வயது உயர்த்தப்பட்டது: பிரதமர் மோடி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதை  முன்னிட்டு அடிக்கடி அங்கு சென்று வரும் பிரதமர் மோடி  இன்று பிரயாக்ராஜில்  நடந்த பல்வேறு 
 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். அப்போது, முக்கிய மந்திரி கன்யா சுமங்கலா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்.

மேலும் பல்வேறு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 1000 கோடி ரூபாய்க்கான  நிதியுதவியை வழங்கினார். இதன் மூலம்  மகளீர் சுயஉதவிக் குழுக்களை  சேர்ந்த 16 லட்சம் பெண்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 202 ஊட்டச்சத்து உற்பத்தி அலகுகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அரசின் திட்டம் மூலம்  பயன்பெறும் பெரும்பாலான பெண்களில் பலருக்கு கடந்த ஆட்சியில் வங்கி கணக்கே இல்லை என குறிப்பிட்டார். எனவே உ.பியில் முந்தைய அரசு ஆட்சிக்கு வர பெண்கள் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும் பெண்கள் உரிய கல்வி அறிவு பெறுவதற்காகவும், ஆண்களுக்கு இணையான வாய்ப்பினை பெற்றுகொள்வதற்காகவும் தான் பெண்களின் திருமண வயது18 லிருந்து 21 ஆக உயர்த்தும் முயற்சிகள் நடப்பதாகவும் பேசினார்.