மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் மின்னல் வேகத்தில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லியில் தலா 20 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை இந்தியாவில் உருவாகிவிட்ட நிலையில், அடுத்த மாதம் 2-வது வாரத்தில் உச்சத்தை தொடும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மேலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்குத்தான் பொது போக்குவரத்து அனுமதி என கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். அப்போது மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்க வாய்ப்புள்ளது.