கொரோனா 3-ம் அலையை  தடுக்க முடியுமா...  பிரதமர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்...

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,  தடுப்பூசிப் பணிகளை மேலும் துரிதப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா 3-ம் அலையை  தடுக்க முடியுமா...  பிரதமர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும் பி உள்ளனர்.
 
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில்  இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த  கூட்டத்தில், கொரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசிப் பணிகளை மேலும் துரிதப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் அரசு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும் விரிவாக பேச உள்ளனர். முன்னதாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பாஜக எம். பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்  அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தி இருந்தார்.
 
மேலும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொருளாதாரத்தை புதுப் பிக்க மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சிதாராமன் பல பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப் பிடத்தக்கது.
 
இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டமும் நடைபெற இருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் 2 ஆலோசனை கூட்டமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.