விவசாயிகளை திருப்திபடுத்த முடியவில்லை... வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றார் பிரதமர்...

3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

விவசாயிகளை திருப்திபடுத்த முடியவில்லை... வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றார் பிரதமர்...

குருநானக் தேவ் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வரும் நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடரின் போது 3 வேளாண் சட்டங்களையும் முறைப்படி திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அப்போது விவசாயிகளின் நலனுக்கான எப்போது பாடுபடுவோம் என மோடி உணர்ச்சி வசப்படு பேசினார்.

3 வேளாண் சட்டங்களால் அனைத்து தரப்பு விவசாயிகளையும் திருப்திபடுத்த முடியாததற்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறிய அவர் டெல்லி எல்லை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களை முடித்துக் கொண்டு விட்டு வீடு திரும்புமாறு கேட்டுக் கொண்டார். விவசாயிகளுக்காக தாம் செய்யும் அனைத்தும் நாட்டுக்காக மட்டுமே என குறிப்பிட்ட அவர், இந்தியாவின் கனவை நனவாக்க தொடர்ந்து கடினமாக உழைக்கப் போவதாக கூறினார். 

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், மத்திய பிரதேசம், ஹரியானா, உத்திர பிரதேச போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் டெல்லியில் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் உச்சநீதிமன்றம் ஓராண்டு காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இருந்த போதிலும் வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் முறையாக திரும்ப பெறும் வரை தங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் உறுதியுடன் போராடி வந்தனர். வெயில், மழை, குளிர் என பாராது போராடிய விவசாயிகள் பலர் போராட்ட களத்திலேயே உயிரிழந்த நிலையிலும் மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தில் எந்த வித அக்கறையும் காட்டாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டதொடரின் போது மாபெறும்முற்றுகை போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்த நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. மோடியின் முடிவை வரவேற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அடுத்த ஆண்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலை கருத்தில் கொண்டே பிரதமர் மோடி இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளன.