பிரதமரின் பயணம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும்- சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதர்

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பயணம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும்- சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதர்

அமெரிக்க சென்ற பிரதமர் மோடி,ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்த பின், நேற்று ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றினார்.

அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இதுகுறித்து பேசிய கவுதம் பம்பாவாலே, கொரோனா உலக மக்களின் பொது சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும்  பெரிதும் பாதித்துள்ளதாக கூறினார்.

இந்த சூழலில் அமெரிக்க சென்று, அந்நாட்டு அரசு மற்றும் முக்கிய நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது பொருளாதாரத்தை மீட்டெடுக்க பெரிதும் உதவும் என கூறியுள்ளார்.