வங்கதேசத்தின் நீண்ட பாலமாக கருதப்படும் பத்மா பாலம்.. திறந்து வைத்தார் பிரதமர் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தின் நீண்ட பாலமாக கருதப்படும் பத்மா பாலம்.. திறந்து வைத்தார் பிரதமர் ஷேக் ஹசீனா

வங்களாதேசத்தின் 19 மாவட்டங்களை தலைநகருக்கு இணைக்க உதவும் நீண்ட பத்மா பாலத்தை பிரதமர் ஷேக் ஹசீனா இன்று திறந்து வைத்தார்.

சுமார் 30 ஆயிரத்து 193 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 கிலோ மீட்டர் நீளத்துக்கு பத்மா நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணி கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது.

தொடர்ந்து கடந்த ஆண்டு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்று பாலத்தை திறந்து வைத்து பிரதமர் ஷேக் ஹசீனா பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். இந்த பாலம் வங்காளதேசத்தின் தென்மேற்கு பிராந்தியத்தின் 19 மாவட்டங்களை தலைநகர் டாக்கா மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொல்கத்தா மற்றும் டாக்காவுக்கு இடையிலான பயண நேரம் இப்பாலத்தால் பாதியாகக் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.