ஆம்வே நிறுவனத்தின் 758 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை உத்தரவு!!

ஆம்வே நிறுவனத்துக்கு சொந்தமான 758 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆம்வே நிறுவனத்தின் 758 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை உத்தரவு!!

மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையில் நேரடி பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமான ஆம்வே நிறுவனத்தின் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2002-03 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் பொதுமக்களிடம் இருந்து இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 27 ஆயிரத்து 562 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அதற்கு நிகராக சுமார் 7ஆயிரத்து 588 கோடி ரூபாய் கமிஷனாக பொதுமக்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை ஏமாற்றப்பட்டதாக சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஆம்வே நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 412 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும், 346 கோடி ரூபாய் மதிப்புள்ள 36 வங்கி கணக்குகளையும் முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.