5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை...

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை...

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு தேவையான ஆயத்த பணிகளை, இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்நிலையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அதில் தேர்தல்களை முறையாக நடத்தி முடிக்க, தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்நிலையில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் ஆணையர் இன்று தனியாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் 5 மாநிலங்களுக்கும் எந்த தேதியில் தேர்தல் நடத்தலாம்? என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.