மேகதாது அணை - சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம்!!

மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலனையில் இருந்து நீக்கியுள்ளது.

மேகதாது அணை - சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம்!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு 2019ஆம் ஆண்டு ஜூன் 20ஆத் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தது.

இத்திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் வறட்சியை சமாளிக்கவும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதற்காகவும் இந்த அணை அவசியம் என கர்நாடக அரசு தனது விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை நீர்வளத்துறை இறுதி செய்யாததால், மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரிய கர்நாடகாவின் விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை பரிசீலனையில் இருந்து நீக்கியுள்ளது.