உ.பியில் இன்று 7வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு... எவ்வளவு வாக்குகள் தெரியுமா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 54 தொகுதிகளுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 

உ.பியில் இன்று 7வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு... எவ்வளவு வாக்குகள் தெரியுமா?

403 தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில்  7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏற்கனவே 6 கட்டங்களாக 349 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் அசம்கார், காசிப்பூர், வாரணாசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் எஞ்சியுள்ள 54 தொகுதிகளுக்கான தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  விறுவிறுப்பாக நடந்த நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். 

வாக்குப்பதிவு  நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பெட்டிகளுக்கு சீல்  வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு  கொண்டு செல்லப்பட்டன.  

இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 54.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 கட்டமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இதேபோல், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 4 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளும் மார்ச் 10ஆம் தேதியே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.