2- வது தேசிய மாநாடு....! டெல்லியில் இன்று தொடக்கம்...!

2- வது தேசிய மாநாடு....! டெல்லியில் இன்று தொடக்கம்...!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் இரண்டாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது

நாட்டின் நீடித்த மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியில் மத்திய மாநில அரசுகளின் உறவுகள் மற்றும் எதிர்கால சிந்தனைகள் தொடர்பாக நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தலைமைச் செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்று நாட்கள் தேசிய மாநாடு நடைபெறுகிறது

டெல்லியில் இன்று தொடங்கும் 2 - வது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைதல், வேலை வாய்ப்பை உருவாக்குதல், மனித ஆற்றலை பெருக்குதல் போன்ற பல்வேறு காரணிகளை முன்வைத்து ஆலோசனை நடைபெற உள்ளது. ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் இந்த மாநாட்டில் மாநிலங்களினுடைய பங்களிப்புகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளன.

மேலும் மாநிலங்களுடன் தனித்தனியே ஆலோசனைகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு மாநிலங்களின் கீழ் உள்ள மாவட்டங்களின் வளர்ச்சி பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து மாநாட்டின் இறுதியில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இதன் முதல் மாநாடு கடந்த ஜூன் மாதம் தர்மசாலாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : பல் பாதுகாப்பு விழிப்புணர்வு ‘காலண்டர்’ வெளியீடு...