ரியாக்டர் வெடித்து பயங்கர விபத்து.. 6 பேர் பரிதாபமாக பலி.. 12 பேர் படுகாயம்!!

ஆந்திரபிரதேசத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீயில் சிக்கி 12 பேர் படுகாயமடைந்தனர்.

ரியாக்டர் வெடித்து பயங்கர விபத்து.. 6 பேர் பரிதாபமாக பலி.. 12 பேர் படுகாயம்!!

ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டத்தில் அக்கிரெட்டிகுடேம் என்னும் பகுதியில்  தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.

இங்கு நேற்று இரவு வழக்கம் போல் 50 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் தொழிற்சாலையில் உள்ள நான்காவது யூனிட்டில் இரவு 2 மணி அளவில் ரியாக்டர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நான்காவது யூனிட் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இதில் 6 பேர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.