அகமதாபாத்தின் பெயரை அதானிபாத் என மாற்றுங்கள் - தெலுங்கானா மந்திரி ராமாராவ் விளாசல்!!

அகமதாபாத்தின் பெயரை அதானிபாத் என மாற்றுங்கள் என்று தெலுங்கானா மந்திரி கே.டி ராமாராவ் விளாசியுள்ளார்.

அகமதாபாத்தின் பெயரை அதானிபாத் என மாற்றுங்கள் - தெலுங்கானா மந்திரி  ராமாராவ் விளாசல்!!

பா.ஜ.க.வுக்கும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் (டி. ஆர்.எஸ்.) இடையிலான மோதல் வலுத்து வருகிறது.  ஐதராபாத்தின் பெயரை பாக்கியநகர் என்று மாற்ற பா.ஜ.க. துடிக்கிறது. இந்நிலையில் அகமதாபாத்தின் பெயரை அதானிபாத் என மாற்றுங்கள் என்று தெலுங்கானா மந்திரி கே.டி ராமாராவ் விளாசியுள்ளார்.

தெலுங்கானாராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவ ரும், தெலுங்கானா மாநில முதல்வருமானசந்திரசேகர் ராவ், மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

ஐதராபாத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்குமான கூட்டத்தை டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தியே தீருவேன் என்று உறுதி கூறி, அதற்கான ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்து கொண்டிருக்கிறார்.

சந்திரசேகர் ராவ், எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதற்கு முக்கியக் காரணம், சமீபத்திய இடைத் தேர்தல் தான் என்று சொல்லப்படுகிறது. தெலுங்கானாவிலுள்ள துபக்காதொகுதியில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பொதுவாக, இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் அம்மாநிலத்தை ஆளும் கட்சிகளே வெற்றி பெறும். ஆனால், தெலுங்கானாவில் நடைபெற்ற சமீபத்திய இடைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று சந்திரசேகர்ராவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

தெலுங்கானாராஷ்டிரிய சமிதிகட்சியினரும்,பா.ஜ.க வினரும் நேரடியாகவே அம்மாநிலத்தில் மோதிக்கொள்ளத் தொடங்கியிருக்கும் நிலையில், பா.ஜ.க. தேசிய செயற்குழுக்கூட்டம் இம்மாதம் 2-ஆம் தேதியும், 3-ஆம் தேதியும் நடைபெற்றது. தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சியை அமைக்க களப்பணியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணி இப்போதே முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பில் 8 கேள்விகள் எழுப்பப்பட்டன. பெட்ரோல் விலை உயர்வு பணவீக்கம்,தெலுங்கானாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான இந்த கேள்விகள் குஜராத்தி மொழியில் இடம்பெற்றிருந்தது. பிரதமர் மோடிக்கு நன்கு புரிய வேண்டும் என் பதற்காக குஜராத்தியில் பதிவிட்டதாக டி. ஆர். தரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு பா.ஜ.க. தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. டி. ஆர்.எஸ். அரசின் 13 தோல்விகளை பா.ஜ.க. உருது மொழியில் பட்டியலிட்டுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் டி. ஆர்.எஸ்.கூட்டு வைத்துள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் உருது மொழியை பாஜக தரப்பு பிரயோகித்துள்ளது. பாஜக - டி. ஆர்.எஸ் மோதல் சமூக ஊடகத்தைக் கலக்கி வருகிறது. ஐதராபாத்தின் பெயரை பாக்கிய நகர் என்று மாற்ற வேண்டும் என்று உ.பி. முதல் யோகி ஆதித்தியநாத் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுவர்தாஸ் ஆகியோர் வற்புறுத்தியுள்ளனர்.

நாங்கள் தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத்தின் பெயரை பாக்கிய நகர் என்று மாற்றுவோம் என மாநில பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடியும் ஐதராபாத்தை பாக்கிய நகர் என்றே குறிப்பிட்டார்.

இதற்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி. ராமாராவ் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். முதலில் அகமதாபாத்தில் பெயரை அதானிபாத் என மாற்றுங்கள் என்று தெலுங்கானா மந்திரி கே.டி ராமராவ் விளாசியுள்ளார்.