''இந்திய மாணவர்கள்  சிறந்து விளங்க புதிய கல்விக் கொள்கை'' தமிழிசை பேச்சு!!

''இந்திய மாணவர்கள்  சிறந்து விளங்க புதிய கல்விக் கொள்கை'' தமிழிசை பேச்சு!!

ஜெயிலர் படம் பார்த்தவர் எத்தனை பேர் என்பது எனக்கு தெரியாது நமது சுதந்திரத்திற்காக ஜெயிலுக்கு போனவர்களை குறித்து தெரிந்திருக்க வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசியுள்ளார்.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விழாவில் பேசியவர், இன்றைய சுதந்திரத்திற்கு காரணம் சுதந்திரப்போராட்ட வீரர்கள் தான் என்றும், ஜெயிலர் படம் பார்த்தவர்கள் எத்தனை பேர் என்பது எனக்கு தெரியாது என்றும் நமது சுதந்திரத்திற்காக ஜெயிலுக்கு போனவர்களை குறித்து எத்தனை பேர் தெரிந்திருக்கின்றார்கள் என்றும் தெரியாது,  நமது சுதந்திரத்திற்காக சிறைக்கு சென்ற தியாகிகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் மாணவர்கள் தாங்களவே தங்களது எதிர்காலத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் என்றும் புதிய தொழில்நுட்பத்தை கவனமுடன் கையாளுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதே போல், தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் எனவும் இந்திய மாணவர்கள் உலக அரங்கில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க || நீட் தேர்வு: "இன்னொரு உயிர் பறிபோனால் திமுக தான் பொறுப்பு" அண்ணாமலை பேச்சு!!