"திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட கோர சம்பவம்".. 13 பெண்கள் பலி!! என்ன நடந்தது தெரியுமா?

உத்தரபிரதேசம், குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற  கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்துள்ளது.

"திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட கோர சம்பவம்".. 13 பெண்கள் பலி!! என்ன நடந்தது தெரியுமா?

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது சில பெண்கள் வீட்டில் பின்புறம் உள்ள கிணற்றில் மேல் ஏறி கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த கிணற்றில் மேல் இரும்பு கம்பிகளால் செய்யப்பட்ட மேடை இருந்துள்ளது.. அந்த கம்பி வலிமையாக இருப்பதாக கருதி 20கும் மேற்ப்பட்ட பெண்கள் கிணற்றின் மேல் ஏறி நின்று கொண்டு பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த கான்கிரீட் மேடை வெயிட் தாங்காமல் இடிந்து விழுந்தது. இதில், மேல் நின்று கொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஆழமான கிணற்றில் விழுந்தனர்.

இதை கண்ட அங்கிருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர்.. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.. அதில், 15-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் படும் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும், கிணற்றில் விழுந்ததில் படும் காயமடைந்த 13 பெண்கள் நீரில் மூழ்கி சம்பவம் இடத்திலையே உயிரிழந்தனர்.

போலீசார், உயிரிழந்தவர்களை மீட்பு பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்பு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில 13 பெண்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.