”விவசாயிகள் எனக்காகவா  இறந்தார்கள்”ஆணவத்துடன் பிரதமர் மோடி என்னிடம்  பேசினார்: மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பேச்சு...

விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்துப் பேசியபோது அவர் ஆணவத்துடன் பதிலளித்ததாக மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

”விவசாயிகள் எனக்காகவா  இறந்தார்கள்”ஆணவத்துடன் பிரதமர் மோடி என்னிடம்  பேசினார்: மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பேச்சு...

ஹரியானா மாநிலம் தாத்ரியில்  ஒரு சமூக நிகழ்வில் பங்கேற்ற அவர், நான் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினேன். அவரிடம் விவசாயிகள் போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்துவிட்டனர் என்றேன். அதற்கு அவர் மிகை மிஞ்சிய ஆணவத்துடன் அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்? என்று கேட்டார். நான் அவரிடம் "ஆமாம், நீங்கள் மன்னராக இருப்பதால் அவர்கள் இறந்தார்கள்" என்று கூறினேன். அவர் உடனே நீங்கள் அமித் ஷாவைப் பாருங்கள் என கூறினார்.

பின்னர் அமித்ஷாவை பார்த்து அவரிடம் நான் பேசினேன்,  ஒரு நாய் இறந்தாலும் கூட பிரதமர் இரங்கல் கடிதத்தை அனுப்புகிறார் என்று அமித்ஷா பேசியதாக 
 சத்யபால் மாலிக்  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சத்யபால் மாலிக் பேச்சை சுட்டிக் காட்டி காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த ஒரு பேட்டி போது பிரதமரின் தற்பெருமை, கொடூர சிந்தனை மற்றும் உணர்வற்ற போக்கைக் காட்ட என்று காங்கிரஸ் சாடியுள்ளது.சத்யபால் மாலிக் பேச்சு அடங்கிய வீடியோவை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.