குஜராத் கலவர வழக்கில் கைதான டீஸ்டா ரூ.30 லட்சம் பெற்றதாக சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை!

குஜராத் கலவர வழக்கில் கைதான டீஸ்டா ரூ.30 லட்சம் பெற்றதாக சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை!

குஜராத் கலவர வழக்கு தொடர்பாக கைதான சமூக ஆர்வலர் டீஸ்டா, சோனியா காந்தியின் செயலாளரிடம் இருந்து 30 லட்ச ரூபாய் பணம் பெற்றதாக சிறப்புப் புலனாய்வுக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மோடி மற்றும் அமித்ஷாவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா மற்றும் முன்னாள் காவல்துறை இயக்குநர் ஆர்.பி. ஸ்ரீகுமார் :

கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா பகுதியில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 58 இந்து யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக நாடு முழுவதும் வெடித்த கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவத்துக்கு காரணம், அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடி மற்றும் அமித்ஷாவை எதிர்த்து சமூக ஆர்வலர் டீஸ்டா மற்றும் முன்னாள் காவல்துறை இயக்குநர் ஆர்.பி. ஸ்ரீகுமார் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

தவறான தகவல்களை வழங்கியதால் கைது:

இதனையடுத்து தவறான தகவல்களை வழங்கியதாக கூறி இருவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இதற்கு வெளிநாடுகளில் இருந்தும் ஐநாவிலும் கண்டனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கலவரம் நடந்த காலகட்டத்தில் சோனியாகாந்தியின் செயலாளர் அகமது படேலிடம் இருந்து 30 லட்ச ரூபாயை 2 தவணைகளாக இருவரும் பெற்றதாக  சிறப்புப் புலனாய்வுக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் ,சிறப்பு புலனாய்வுக்குழு வெளியிட்ட அறிக்கைக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதில் முன்னதாக பணம் வழங்கியதாக கூறப்படும் அகமது படேல் கடந்த 2020ம் ஆண்டு காலமானது குறிப்பிடத்தக்கது.