இந்தியா முழுவதும் வேகம் எடுத்து வரும் கொரோனா பரவல் : விரைவில் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!!

பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனைநாடு முழுதும் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, பிரதமர் மோடி விரைவில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் வேகம் எடுத்து வரும் கொரோனா பரவல் : விரைவில் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று காணொலி காட்சி  மூலம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு சிறப்பு குழுக்களை அனுப்புவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட அளவில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என பிரதமர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி விரைவில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.