டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி மூடல்...

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பள்ளி கல்லூரிகள் மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி மூடப்படுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி மூடல்...

டெல்லியில் மாசுக் கட்டுப்பாடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிகரித்து வரும் காற்றின் மாசு அளவை கட்டுப்படுத்த டெல்லியில் கடந்த 14 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மாசுக் கட்டுப்பாடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு அரசு அலுவலர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படியே பணி புரிய உத்தரவிடப்பட்டது. தனியார் நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டன.

 

இந்த நிலையில் 3 நாள் மாசுக் கட்டுப்பாடு ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பள்ளி கல்லூரிகளும்  காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரும் 21 ஆம் தேதி வரை 50 சதவீத தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணி புரிய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் கட்டுமான பணிகளுக்கும் வரும் 21 ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.