உங்கள் இருக்கைகளுக்கு திரும்புங்கள்-வெங்கையா நாயுடு

உங்கள் இருக்கைகளுக்கு திரும்புங்கள்-வெங்கையா நாயுடு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நடைபெற்ற அமளிக்குப் பிறகு இன்று  மீண்டும் தொடங்கப்பட்டன.  இருந்தபோதிலும் எதிர்கட்சிகளின் கடும் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் குறித்த விவாதங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷங்களுக்கு மத்தியில் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

ராவத் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜ்யசபாவில், சிவசேனா எம்.பி. ,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“உங்கள் இருக்கைகளுக்கு திரும்புங்கள். வெளியில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நீங்கள் அபையைப் பயன்படுத்த முடியாது, ”என்று மாநிலங்களவையின் தலைவர் வெங்கையா நாயுடு அவையில் அமளிகளுக்கு இடையில் அறிவுறுத்தியுள்ளார்.