ஜனவரி 3 முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி... 10ம் வகுப்பு ஐ.டி கார்டை வைத்து முன்பதிவு செய்யலாம்...

ஜனவரி 1ம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 3 முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி... 10ம் வகுப்பு ஐ.டி கார்டை வைத்து முன்பதிவு செய்யலாம்...

இந்தியாவில் டெல்டா வகை கொரோனாவுக்கு இடையே, உருமாறிய ஒமிக்ரான் பரவி வேகமாக பரவுகிறது.  பல நாடுகளில் ஒமிக்ரான் தொற்றுக்கு குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில் 15 முதல் 18 வயதிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள விரும்பும் பெற்றோர், கோவின் தளம் வாயிலாக ஜனவரி 1ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அத்தளத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த முன்பதிவுக்காக ஆதார் எண் இல்லாத சிறார்கள் 10ம் வகுப்பு ஐ.டி கார்டினையும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இணை நோய் இருப்பினும், அதுதொடர்பான சான்றிதழை சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோர், இரு டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் 9 மாதங்கள் கழித்து பூஸ்டர் டோஸுக்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.