டெல்லியில் விவசாயிகளை தடுக்க போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்...

டெல்லி எல்லையில் விவசாயிகளை தடுப்பதற்காக போடப்பட்டிருந்த தடுப்புகளை போலீசார் அகற்றியுள்ளனர்.

டெல்லியில் விவசாயிகளை தடுக்க போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்...

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் போராடி வரும் விவசாயிகள், கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள்.

அந்த பேரணி கலவரத்தில் முடிந்ததால், டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளை தடுக்க சிமெண்ட் தடுப்புகள், கான்கிரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டன. நடந்து செல்வோரைத் தடுக்க, சாலைகளில் ஆணிகள் பதிக்கப்பட்டிருந்தன.  

தற்போது விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதால், அவை அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. டெல்லி-ஹரியானா இடையே உள்ள  திக்ரி எல்லை மற்றும் டெல்லி-உத்தரப்பிரதேசம் இடையே உள்ள காஜிபூர் எல்லையில் அமைந்திருந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.