கர்நாடகாவிற்கு ' ரெட் அலெர்ட் ' எச்சரிக்கை...!

கர்நாடகாவிற்கு  ' ரெட் அலெர்ட் '  எச்சரிக்கை...!

கடலோர கர்நாடகாவிற்கு இன்று சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்து,  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வட இந்தியா, வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா என இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில்,  அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாநிலங்களுக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அந்த வகையில் ஒடிசா, கடலோர கர்நாடகாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும்,

இமாச்சல பிரதேஷ், உத்தரகாண்ட், மாநிலங்களில் வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளிலும் கேரளாவில் இன்றும், ஆரஞ்சு நிற எச்சரிக்கையும்,  மேலும்,  வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேஷ், அசாம், மெகாலயாவில் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், கோவா மற்றும் மகாராஷ்டிரா, கடலோர ஆந்திர பிரதேசத்தில் இன்று முதல் 27 ஆம் தேதி வரையும் மஞ்சள் நிற எச்சரிக்கையையும்,  இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதேபோல்,  இன்றைய தினம் கடலோர கர்நாடகாவிற்கு மிக அதிக கன மழைகாண சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதையும் படிக்க   | மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம் - ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட்!