'உலகிலேயே மிக அதிகாரமிக்க பாஸ்போர்ட் ' அந்தஸ்தைப் பெற்றது - சிங்கப்பூர்..! இந்தியா பிடித்திருக்கும் இடம் என்ன தெரியுமா?

'உலகிலேயே மிக அதிகாரமிக்க  பாஸ்போர்ட் ' அந்தஸ்தைப் பெற்றது -  சிங்கப்பூர்..!    இந்தியா பிடித்திருக்கும் இடம் என்ன தெரியுமா?

 ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம்  வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி,   2022 இல்  87 வது இடத்திலிருந்த  இந்திய  பாஸ்போர்ட்டின் மதிப்பு  2023 இல் 80 வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.  

சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அளித்த  தகவலின்படி,  பயனர்கள்  விசா இல்லாமல் எத்தனை இடங்களுக்கு செல்லமுடியும் என்பதன்  அடிப்படையில் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு வரிசைபடுத்தப்படும்.  அதன்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 57 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகல்  வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, ஹென்லி பாஸ்போர்ட் வெளியிட்டுள்ள  குறியீட்டு தரவரிசை பட்டியலில்,  கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாதவாறு, முதல் முறையாக  மொத்தம் 227 நாடுகளில்  192  நாடுகளுக்கு, விசா இல்லாத அணுகலை வழங்கி   தரவரிசை பட்டியலில் ஜப்பானை மூன்றாம்  இடத்திற்கு தள்ளி, 'உலகிலேயே மிக வலிமையான பாஸ்போர்ட் ' என்ற அதிகாரபூர்வமான அங்கீகாரத்தை  சிங்கப்பூர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Japan and Singapore leads in passport index - हिन्दुस्थान समाचार

மேலும், 190 நாடுகளுக்கு விசா இல்லா அணுகலை வழங்கி,  ஜெர்மனி, இத்தாலி, மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் இந்த தரவரிசை பட்டியலில்   2-ம் இடத்தை பெற்றிருக்கின்றன.  அதேபோல, 189 நாடுகளுக்கு விசா இல்லா அணுகலை வழங்கி,  ஆஸ்திரியா, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், லக்ஸம்பர்க்,  தென்கொரியா, மற்றும் ஸ்வீடன் நாடுகளோடு, ஜப்பானும் இந்த தரவரிசை பட்டியலில்  3-வது இடத்தை பெற்றிருக்கிறது. 

அதேபோல, ஆறு ஆண்டுகள் சரிவிலிருந்த  இங்கிலாந்து அந்த சரிவிலிருந்து மீண்டு  தற்போது, இரண்டு இடங்கள் முன்னேறி, 2017-ல் இருந்ததுபோலவே தரவரிசை பட்டியலில் 4-வதாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Japan and Singapore Now Hold World's Most Powerful Passports -  VisaGuide.World

இது இப்படியிருக்க, மறுபுறம், சுமார் 10 வருடங்களாக பட்டியலில் பின்தங்கியிருந்த ’அமெரிக்கா’ , மேலும், இரண்டு இடங்கள் பின்தங்கி  தற்போது 184 நாடுகளுக்கு விசா இல்லா அணுகலை வழங்குவதன் மூலமாக 8-வது இடத்தில்  இருக்கிறது. இங்கிலாந்து  மற்றும்  அமெரிக்கா, இரண்டு நாடுகளுமே சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக 2014 -ம் ஆண்டில் இந்த தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

With a Low in Official Rank, US Passport is Much Less Powerful This Pandemic

 இந்த தரவரிசையில் முதல் 10 இடங்களை பெற்றிருக்கும் நாடுகளில், கடந்த 10ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் 2013 தொடங்கி 2023 வரையிலுமே அமெரிக்கா மட்டும் வெகு குறைந்தளவிலே முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதாவது 10 ஆண்டுகளுக்கும் சேர்த்தே வெறும் 12 கூடுதல் நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Henley Passport Index 2023 Ranking: Singapore is World's Strongest Passport,  Check India Rank

மொத்தத்தில் ஒப்பிடுகையில், ’சிங்கப்பூர்’ கடந்த 10 வருடங்களில்  முன்பிருந்ததை விட 5 இடங்கள் முன்னேறி தற்போது ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசையில்  உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா போலவே டோகோ மற்றும் செனெகல் நாடுகள் 80-வது இடத்தில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க    | ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம்: "தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை" மத்திய அரசு வாதம்!