அனைத்துக்கும் 40% கமிஷன்...கர்நாடக அரசை விமர்சித்த ராகுல் காந்தி!

அனைத்துக்கும் 40% கமிஷன்...கர்நாடக அரசை விமர்சித்த ராகுல் காந்தி!

கர்நாடகாவில் அனைத்துக்கும் அரசு கமிஷன் பெறுவதாக ஒப்பந்ததாரர்கள் வருத்தம் தெரிவிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். 

காந்திக்கு மரியாதை செலுத்திய ராகுல்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நாடு முழுவதும் ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் தொடங்கி கேரளாவில் தொடர்ந்த அவர், தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் காந்தியடிகளுக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். அதன்பின் நடைபயணத்தைத் தொடர்ந்த அவர், காலலே கேட் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசினார். 

அரசு ஒப்பந்தங்களுக்கு கமிஷன்:

அப்போது, கர்நாடகாவில் நடைபெற்று வரும் பசவராஜ் பொம்மையின் ஆட்சியில் அனைத்து அரசு ஒப்பந்தங்களுக்கும் 40 சதவீதம் கமிஷன் பெறப்படுவதாக விமர்சனம் செய்தார். இதனால் ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், இதுகுறித்து பிரதமர் மோடியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

இதையும் படிக்க: அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்...ஓசியை அனுபவிப்பவர்கள் ஓசியை பற்றி பேசுகிறார்கள்...!

இதன் பின்னர் ராகுல் காந்தி, மைசூர் மாவட்டத்தின் கடகோலா பகுதியில் காங்கிரஸார் மற்றும் பொதுமக்கள் புடை சூழ ஒற்றுமைப் பாதையை மேற்கொண்டார்.