மோடியை விமர்சித்த அதேபகுதி...’ஜெய் பாரத்’ யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி!

மோடியை விமர்சித்த அதேபகுதி...’ஜெய் பாரத்’ யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி!

கர்நாடகாவில் வரும் 9-ஆம் தேதி 'ஜெய் பாரத்' என்ற பெயரில் ராகுல் காந்தி யாத்திரையை தொடங்க உள்ளார்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை விமர்சித்து பேசியிருந்தார். இதனை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் மே மாதம் 10-ஆம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட ராகுல் முடிவெடுத்துள்ளார்.

இதையும் படிக்க : சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததன் எதிரொலி...காரைக்காலில் மாஸ்க் அணிவது கட்டாயம்!

அதன்படி, வரும் 9-ஆம் தேதி கோலார் பகுதியில் 'ஜெய் பாரத்' என்ற பெயரில் யாத்திரையில் ஈடுபட உள்ள ராகுல் காந்தியுடன், மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 11-ஆம் தேதி வயநாட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பிரதமர் மோடி குறித்து விமர்சித்து பேசிய கோலார் பகுதியிலேயே ராகுல் காந்தி மீண்டும் யாத்திரையை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.