ஆர்எஸ்எஸ் கருவியான ஆளுநர் ஆரிஃப் - முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்

ஆர்எஸ்எஸ் கருவியான ஆளுநர் ஆரிஃப் - முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்

ஜனநாயகத்திற்கு எதிராக கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான், தனது பதவியை தவறாக பயன்படுத்துகிறார் என 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜினாமா குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜஸ்ரீ நியமனத்தை உச்சநீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. இதனை சுட்டிக்காட்டி, சுமார் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஆளுநர் பதவி என்பது அரசுக்கு எதிரானது அல்ல எனவும் அரசியலமைப்பின் கண்ணியத்தை நிலைநிறுத்தவே எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆரிஃப் முகமதுகான், ஆர்எஸ்எஸ்-ன் கருவியாக செயல்படுகிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.