சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்..!

சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்..!

கோவாவில் 2 ஆயிரத்து 870 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

கோவா மாநிலம் மோபா பகுதியில் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பெயரில் கட்டமைப்பப்பட்டுள்ள இந்த சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த விமான நிலையம் கோவாவின் 2 வது விமான நிலையம் ஆகும்.

பின்னர் பேசிய பிரதமர், உலகின் மூன்றாவது பெரிய விமான சந்தையாக இந்தியா மாறியுள்ளதாக கூறினார். கடந்த எட்டு ஆண்டுகளில், விசா பெறுவது உட்பட விமான பயணத்தை எளிமையாக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

முன்னதாக, நாக்பூரில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதேபோல், மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்கி வைத்த அவர், ரயிலில் பயணம் செய்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதேபோல், ஷீரடி - நாக்பூர் இடையே 520 கிலோ மீட்டர் விரைவு சாலை, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருத்துவமனையையும் அவர் திறந்து வைத்தார்.  இந்த விழாவில் பேசிய மோடி,குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிக பெரும் எதிரிகள் என்று  சாடினார்.