பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரம் குறித்து ட்விட்டர் நிறுவனம் விளக்கம்...

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரம் குறித்து அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரம் குறித்து  ட்விட்டர் நிறுவனம் விளக்கம்...

பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு மர்மநபர்கள் சிலரால் இன்று அதிகாலை திடீரென சிறிதுநேரம் ஹேக் செய்யப்பட்டது.பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு மர்மநபர்கள் சிலரால் இன்று அதிகாலை திடீரென சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது.டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட இந்த சிறிய இடைவெளியில் பதிவிடப்பட்ட விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம், ஒதுக்கிவிடுங்கள்  என மத்திய அரசால்   தெரிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்   பிரதமர் அலுவலகத்துடன் 24 மணி நேரமும் நேரடி தொடர்பு வைத்துள்ளோம். என்றும்  ஹேக் செய்யப்பட்ட பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு உடனடியாக பாதுகாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். இந்த குறுகிய நேரத்தில்  பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில் வேறு எந்த தாக்கமும் ஏற்படுத்தப்படவில்லை என தங்களது  விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.